சிலேட்டுக்குச்சி
சின்னக் குழந்தையின்
சிலேட்டுக் குச்சியில்தான்
எதிர்கால தேசம்
எழுதப் படுகின்றது
லஞ்சமும் ஊழலுமாய்
அழுக்காய்க் கிடக்கிற
சிலேட்டில் காறி உமிழ்ந்து
கழுவிவிட்டு
புதிதாய் வரைகிறான் ..
அவனது தேசத்தில்
எல்லைக் கோடுகள் கூட
எங்கும் இருக்கவில்லை !