அன்றும் இன்றும் நாடு
![](https://eluthu.com/images/loading.gif)
பாசமும் நேசமும் நிறைந்திட்டு
பண்போடு அன்பும் வழிந்திட்டு
நீதியும் நேர்மையும் தழைத்திட்டு
முன்னோரை என்றும் நினைத்திட்டு
முதியோரை மனங்கள் மதித்திட்டு
பெற்றவரின் சொல்கேட்டு நடந்திட்டு
உதவிடும் எண்ணமும் வளர்ந்திட்டு
உண்மையாய் வாழ்ந்தனர் உலகில் அன்று !
போட்டியும் பொறாமையும் நிலைத்திட்டு
வஞ்சகமும் நஞ்சு மனமும் நிறைந்திட்டு
பொய்யும் புரட்டும் இரண்டற கலந்திட்டு
சாதிமத வெறிகள் தணலாய் பரவிட்டு
ஏமாற்றும் எண்ணமே மேலோங்கிட்டு
மதுவிற்கு அடிமையாகி மயங்கிட்டு
வறுமையும் வன்முறையும் உயர்ந்திட்டு
பசுமையும் விவசாயமும் மறைந்திட்டு
பசியோடும் நோயோடும் வாடுவதுடன்
சுற்றித் திரிந்திடும் சூழ்நிலையே இன்று !
பழனி குமார்