+போய் வருகிறேன்!+
போய் வருகிறேன் அம்மாவே!
போய் வருகிறேன் அப்பாவே!
போய் வருகிறேன் அண்ணனே!
போய் வருகிறேன் தங்கையே!
நான் குளிக்கிற ஆத்துமேடே!
நட பழகின வயக்காடே!
சிரிக்க வைக்கிற சின்னப்பொண்ணே!
பிரிஞ்சு போறேன் சொந்தமண்ணே!
நான் வளர்க்குற வெள்ளமாடே!
எனக்கு பிடிச்ச மொறட்டுஆடே!
தெனம் பயமுறுத்தும் பச்சக்காடே!
போகப் போறேன் மாமியார்வீடே!
என் உசுரு தோழிகளே!
எங்க வீட்டு கோழிகளே!
கல்யாணம்தான் கட்டிக் கிட்டு
காலையில் நான் கெளம்புறேனே!
அடுப்படி உன்னை விட்டுட்டுத்தான்
மொறப்படி நான் போறேன்டி!
விடுப்பு அவர்க்கு கெடச்சவுடன்
விருப்பி திரும்பி வாரேன்டி!