பொன்னாடை
காத்திருந்து
காதலர்கள் -மெய்
தழுவிக்கொள்வதில்
கன்னி எனக்கு
முதலிரவுதான்
முழுநாளும் அப்போது ..!
மூச்சுமுட்ட
முப்பது தோள்களில்
முக்காடிட்டு கிடப்பதால்
கற்பழிப்புதான்
கன்னி எனக்கு
தினம் தினம் இப்போது !
பொன் என்ற -என்
பெண்னாடைக்கு
பெறுமதி கிடைப்பதுதான்
எப்போது ?