காதல் இதுதானோ-1
அவள் வாழ்க்கையை திசை மாற்றிய முதல் சந்திப்பின் நினைவுகளை அசை போட்ட வண்ணம் பதுமையாய் அமர்ந்திருந்தாள் மது..
கல்லூரி பேருந்தின் முதல் இருக்கையில் அவளும்.. கடைசி இருக்கையில் அவனும்.. நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராய் இறங்கி சென்றனர்.. அங்கே அவளும் அவனும் இன்னும் சிலருமே எஞ்சியிருந்தனர்..
உறங்கி கொண்டிருந்த அவள் அருகே அவன் வந்தான்.. பக்கத்தில் யாரோ நிற்பதை உணர்ந்த அவள் திடுக்கிட்டு விழித்தாள்.. தலை நிமிரவும் அச்சம் கொண்டு, "என்ன வேண்டும்" என்றாள் மடியில் இருந்த பையை பார்த்து கொண்டே.. எழுந்து சென்று பின்னால் உட்கார சொன்னான் அவன்.. மறு பேச்சின்றி அவளும் சென்றாள்.
அவள் அருகே ஒரு பெண் இருந்தாள்.. தர்ஷினி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவள் இடைவிடா கேள்விகளால் அவளை துளைத்தெடுக்க தொடங்கினாள்..
உன் பெயர் என்ன? “மது..”
எந்த துறை? “கணினி..”
ஹாஸ்டலா? “ஆமாம்..”
ஒரு வார்த்தையில் வந்து விழுந்தன பதில்கள்.. இறுதியாய் ஒரு கேள்வி வைத்தாள் அப்பெண்..
முதல் வருடம் தானே? “ஆமாம்” என்றாள் மது. அமைதி காத்தாள்.. ஏதோ தோன்றியவள் போல் சட்டென திரும்பினாள்..
“முதல் வருடம் முதுகலை பிரிவு” என்றாள்.
அதிர்ச்சியும் குறும்பும் கலந்த சிரிப்போடு தர்ஷினி அவனை அழைத்தாள்.
“அண்ணா எல்லாம் போச்சு.. இவங்க நமக்கு சீனியர்” என்றாள்..
திகைப்பும் பரிதவிப்பும் மேலோங்க அவன் அவளை நோக்கினான்..
“நானும் முதுகலை தான்” என்றான் பொய்யாக..
மாதிரி தேர்வு நடந்த நேரம் உண்மை உடைந்து தெறித்தது.. அவன் இளங்கலை இறுதி ஆண்டு
என்று..
அவனுக்கு அவளை கண்டால் ஒரு புன்னகை எப்போதும்.. அவளுக்கோ பயம்.. பயம் நாணமாய் மாறியது ஜூனியர்கள் அடித்த கிண்டலில்..
கவிதைகள் படைத்தான் அவன் அவளுக்காக.. இதோ இந்த மாதிரி..
உன்னிடம் எப்படி மயங்கினேன்
என்று என்னை நானே கேட்டு கொண்டேன்!
பின்னர் தான் தெரிந்தது
பெயரிலேயே போதையை வைத்து
என்னை கிரங்கடித்தாய் என்று..
என் இனியவளே மது!
அது தான் கவிதையா என்று நகைத்தாள் அவள்.. தன்னை விட சிறியவன் என்ற உண்மை நகைப்பாக இருந்தது.. கல்லூரி வளாகத்தில் எங்கு அவனை கண்டாலும் பயந்து தலை குனிவாள் அவள்..
பிறந்த நாள் கொண்டாடினான் அவன்..
“அண்ணிக்கு கேக் கொடுங்கள்” என்றனர் பேருந்தில் இருந்தவர்கள்..
“அவள் புன்னகை கிடைத்தால் கேக் தொழிற்சாலையே பரிசளிப்பேன்” என்றான் அவன்..
ஏதோ தவறு நடப்பதை உணர்ந்தாள் அவள் .. வாழ்த்து சொல்லவும் பயந்தாள்.. அண்ணனுக்கு பிறந்த நாள் பரிசளித்தனர் ஜூனியர்கள்.. அண்ணியின் கைபேசி எண்ணை..
விறைத்து போனாள் அவள்.. தம்பி என்றே அழைத்தாள் அவனை.. சீறினான் அவன்.. பின்னர் கெஞ்சினான்..
“என்னை விட நீ தான் சின்னவள்.. உன் பிறந்தநாளை முன்பே தெரிந்து கொண்டேன்; அவசரபட்டு உன்னை பள்ளியில் சேர்த்தது உன் பெற்றோர் பிழை.. அது என் தவறா?” என்றான்.
"தம்பி என்றழைத்து என்னை கொல்லாதே மது.. நீ என் காதலி” என்றான்..
“விளையாடுகிறாய் தானே?” அச்சத்தோடு வினவினாள் மது..
தொடரும் காதல் பயணம்... :)