மன்னிப்பது மனித குணம்

மனிதா உன்னைத் தேடுகிறேன்.
மனதில் எண்ணிப் பாடுகிறேன்..
இனிதா நலமா சுபம்தானா?
மனதும் உன்னில் வசம்தானா?

அவசரப் பயணமும் தூரமோ!
அடைவதும் அதற்கிது நேரமோ!
காலத்தின் கட்டாய வேகமோ!
கடவுளை மறந்தும் போகுமோ!

போகும் காரியம் புரிந்ததா?
பொறுமையில் தானது விளைந்ததா?
ஆகும் செயலதும் அவசியமா?
ஆகிய பின்னதும் வசியுமா?

எடுத்ததுத் தானது முடித்தாயோ!
தொடுத்தும் அதனில்ப் படித்தாயோ!
அடுத்ததன் பயனைக் கணித்தாயோ!
மடுத்ததன் செயலைத் துணித்தாயோ!

மற்றவர் செயலின் நியாயங்கள்;
மனதில் அலசும் உன்னயங்கள்;
உற்றதுத் தன்னில் உள்நுழையாய்வு:
தேற்ற விழைவும் தீர்வும் முயலாதேன்?

தன்னைத் தேடான் பிறனைத்தண்டிக்க
என்னைப் பாடவன் அவன் தகை இருக்கு?
முன்னைக் கேடவன் முதுகினில் சுமக்க
பின்னைப் படுவினைப் பிறன்பழி எதற்கு?

குற்றஞ்செய்யான் குவளையம் உண்டோ!
முற்றும் ஆய்ந்து முடிவதுத் தீர்வோ!
செற்றம் ஓய்ந்த சீர் நிலைத் தூக்கோ!
தெற்றாத் தீர்வதும் உற்றதுச் செயலோ!

அவசரத் தண்டனை அநியாயமாகும்
அடுக்கும் விசாரனை நியாயந்தெளியும்.
மன்னிக்குங் கருணைத் தாமதம் வேண்டாம்.
மன்னுயிர்க் காப்பதும் பொன்செய் அறமாம்.

இளங்கோவடியவன் அன்றே சொன்னான்
அறங்கூற்றானால் ஆர்த்துணைச் செய்வான்?
வளங்கொண்ட நீதி வகைகள் செய்தான்.
நலங்கொண்டுச் சூழல் நிலைகள் ஆய்கன்!

மன்னித்து மறப்பவன் மனிதனாவான்.
முன்னித்து உலகின் முதல்வனாவான்.
பின்னியம் போற்றும் சென்னியனவான்.
நன்னியம் சொன்ன நாயகனாவான்.

மன்னிக்கப்பட்டவன் தன்னிலை உணர்வான்.
முன்வினை ஒழித்து முன்னிலை உயர்வான்
பொன்னுயிர் மதிப்பும் நன்னிலை அறிவான்.
இன்னுயிர் நினைத்து வெண்ணிலை பெறுவான்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (4-Nov-13, 8:33 pm)
பார்வை : 302

மேலே