என் தாயி மகராசி,,,,,

என் தாயி மகராசி.
===============

விறகு பொருக்கி அடுப்பு மூட்டி
விறகோடு சேர்ந்து தானும் வெந்து
கஞ்சி வடிச்செடுத்து
ஆறாம ஊட்டிடுவா
என் தாயி மகராசி ,,,,,,,,,,,,,,

ஆழ்கிணற்று நீர் இழுத்து
குடம் முழுக்க நீர் நிரப்பி
குடத்தோடு சேர்த்து கஷ்டமும் சுமந்து வந்து
என் தாகம் தீர்த்துவெச்சா
மகராசி எந்தாயி ,,,,,,,,,,,

களைபிடுங்கி கதிரறுத்து
பதர்விலக்கி நெல்லெடுத்து கோணியில சேர்த்துக்கட்டி
அவிச்சுக்குத்தி
அரிசி வேறு நெல்லு வேறு வித்துக்காசாக்கி
பட்டப்படிப்புக்கு பகலிரவா பாடுபட்டா
அவ தாயி மகராசி ,,,,,,,,,,,,,

ஆத்தாங்கரையோரம் குளிக்கப்போனாலும்
அடிமனசு படபடக்கும்
ஆத்துக்கும் சொல்லிவெப்பா
என் புள்ள கவனம் எண்டு
அவதான் என் மகராசி,,,,,,,

தல சாஞ்சி நான் தூங்க
மடிமேல இடங்கொடுத்த மார் மேல தூங்கவெச்ச
தரணியியில நான் சிறக்க
அவன் அருளும் வேண்டிநிப்ப
நீ தாயி மகராசி,,,,,

உன் புகழ் நான் பாட
காலமெல்லாம் பார்த்திருக்க
பக்கத்துல நீ வேணும் பாசம் பரிமாறிடனும்
உன் கூட நானிருக்கன்
நீதானே மகராசி ,,,,,,.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (14-Nov-13, 8:35 pm)
பார்வை : 151

மேலே