நினைவின் இனிமை
பொழுது புலர்ந்தது
நாமும் அதனுடன் ...
வாழ்க்கைத் தன் இனிய
பயணத்தைத் தொடங்க
பகலவன்
நம்மைக் கண்டு
கருவிக் காணாது
இயல்பினில் விலகி
விரைவிலேயே
மறைந்தான்
நம்மை
வெவ்வேறு கூட்டில்
அடைத்த மகிழ்வுடன்....
பாவம்
அவன் அறியவில்லை
நினைவின் இனிமையை !!!