ஒரு வார்த்தையில் உயிர் கொடுத்து உயிர் எடுத்தாய் 555
பாவையே...
நீதான் என் சுவாசமென
வாழும் எனக்கு...
நீ தரும்
அவமானங்கள் பல...
பிடிக்கவில்லை
வார்த்தையை...
முகம் பார்த்து
சொல்லலாம் நீ...
அவமானங்கள்
ஏனடி பாவையே...
நீ பதில் தந்தாள்
திரும்பி சென்று இருப்பேன்...
உன்னை பின்
தொடராமலே...
இப்படி தினம் தினம்
ஏனடி மானே...
உன் ஒரு வார்த்தையால்
உயிர் கொடுத்தாய்...
மறுவார்த்தையால்
என் உயிரை பரிகிறாய்...
போதுமடி உன்னை
நினைத்த எனக்கு...
உன் நலம் விரும்பி
விலகுகிறேன்...
உன்னை நினைத்து
வாழ மாட்டேன்...
என்னை நினைபவளோடு
வாழ போகிறேன்...
நலமுடன் நீ.....