-ஆம் ஆத்மிதான் கேட்கிறேன்
--------ஆம் ஆத்மிதான் கேட்கிறேன்-------
------------புதுக்கவிதை -------------------------
இப்படித்தான் பிறந்ததோ
இந்தியப் பொருளாதாரம்?
இன்னும் பொறுப்பது
எத்தனை நாட்களோ?
சிந்தனை செய்தவர்
செயல்மறந் தாரோ?
சேர்த்த உரங்களும்
சென்றது எங்கே!
நீர்த்த வயல்களும்
நிற்பதேன் காய்ந்து?
பார்த்த நாடுகள்
போதுமென் றில்லையோ?
பயனென எமக்குப்
பகிர்ந்திட இல்லையோ?
வேர்த்துக் கேட்கிறேன்
வெறும்குடி மகன்,நான்!
ஆம்!
ஆம் ஆத்மிதான்!