ஏக்கம் தீருமா உங்களால் மாறுமா
கயிரு மீது நடக்கிறோம்...
கால் கடுக்க நிற்கிறோம்..
கார்மேகம் கவலை பட்டதில்லை..
காரில் செல்பரவர்களும் என் நிலைமை எண்ணி வருந்தியதில்லை ....
வாழ்விழந்து வறுமையில் வாடுகிறேன் ...
வாட்டும் வெயிலில் வயிற்ருக்காக அமர்ந்திருக்கிறேன் ...
எழுந்து வா புது வாழ்க்கை தருகிறோம் என்று யாரும் அழைத்தது இல்லை...
வாழ்விழந்து நிற்கும் என்னை பற்றி யாரும் கவலை பட்டதும் இல்லை...
வசதிகள் நிறைந்தவர்கள் கொஞ்சம் நினைத்து பாருங்களே...
உங்கள் வாழ்வில் எப்போதாவது எனக்கு உதவ வாருங்களே...
கையேந்தி பிழைக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை ...
கருவறையில் இருந்த என்னை யாரும் கலைக்க வில்லை...
வாழ்விழந்து நிற்கும் எனக்கு வசதி வேண்டாம்..
வறுமையில் என் பிள்ளைகள் வாடுவதை நான் பார்க்க வேண்டாம்..
உயர்த்தும் கையில் உங்கள் உதவி வேண்டாம்..
ஊர் தரையில் என் பிள்ளைகள் உறக்கம் வேண்டாம்..
ஊர் கூடி முடிவு செய்து ஒரு உதவி செய்யுங்கள்...
உங்களைப்போல் வாழ எனக்கு ஒரு வழியை காட்டுங்கள்...
இவர்கள் தான் என ஒதுக்கி விடாதீர்கள் ..
ஒரு வேலை சோறுக்காக கையை எந்த விடாதீர்கள்..
உங்கள் ஊரில் எங்காவது ஒரு ஓரத்தில் நான்.....
ஆதரவின்றி..........