பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

லட்சம் விதையில் ...
ஒற்றை கவிதை...
விருச்சமான நாள்....

ஆயிரம் மருந்துகள்..
போக்க முடியாத....
உன் தாயின் பிரசவ வழியை....
ஒற்றை நொடியில்.....
நீ போக்கிய நாள்......

அழுது கொண்டே
சொர்க்கத்தில் இருந்து
நீ விடை பெற்ற நாள்...

உன்னைப் படைத்த
பிரம்மனை
முதன்முதலாய்
நீ பார்த்த நாள்..........

உன்னை அழ வைத்து...
எல்லோரும் ரசித்த நாள்...

முதன் முதலாய் நீயே
முயன்று மூச்சு விட்ட நாள்...

இன்று தானே
உன் பிறந்த நாள் ......

இந்நாள் போல்
எந்நாளும் நீ வாழ
வாழ்த்துகிறேன் தோழா......

இந்த நண்பனின் சிறு வேண்டுகோள்
தோழா..........................!
விட்டு கொடுத்து விடாதே..
யாருக்காவும்
உன்னை படைத்த
சிப்பியையும், சிற்பியையும் ....

மீண்டும் ஒரு முறை
என் இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள் நண்பா....

எழுதியவர் : ஜெகன் (21-Dec-13, 11:03 am)
பார்வை : 484

மேலே