திணிக்கப் பட்ட இடைவெளிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
செடிகள் கொடுத்தது
பூங்கொத்து....!
விழிகளால்
வாங்கிக் கொண்டேன்...!
நன்றி என்றது...!
எதற்கு என்றேன் மவுனமாக...
என்னை ரசித்ததற்கு....
என்று அது சொல்ல வருவதற்குள்...
அங்கே என்ன வேடிக்கை ?
எடுயா வண்டிய.....
அவசரப் படுத்தினான் சிக்னலில்
பக்கத்து வண்டிக் காரன்.....
யதார்த்த வாழ்க்கையை புரிந்து கொண்டேன்...!
துரத்துகிறது கடிகார முட்கள்......
தொலைவாக ஓடிக் கொண்டிருக்கிறேன்
இப்போது
கண்ணுக்குத் தெரியவில்லை அந்தப் பூச்செடி