அரவிந்த் கேஜ்ரிவால் நாமாவளி
தில்லிவாழ் மக்கள் துண்டித்த கைகள்
சிந்திய உதிரம் காயும் முன்னே
துண்டித்த கைகளை துணையாய்க் கருதி
பற்றிக் கொண்டான் அரவிந்தன்
எத்தனை நாட்கள் செய்வான் ஆட்சி
என்றே மக்கள் துயரம் கொண்டார்
உயர்ந்த வேகத்தில் வீழ்ந்தால் கீழே
உலகோர் நகைப்பர் உன்னைக்கண்டு