என் செல்ல மகளே

அடி
கள்ளக் குட்டி
எங்கள்
செல்லக் குட்டி !

உறக்கத்திலும் விழிப்பிலும்
என்ன மோகனப் புன்னகை ?

ஒரு செல்லச் சிணுங்கலில்
என்ன ரகசிய சமிக்சை ?

இரவு பகல் எந்நேரமும்
அடைத்துக்கொண்ட
கதவுகளுக்கு பினனால்
அம்மாவுடன் என்ன
அந்தரங்கப் பரிவர்த்தனை ?

நீ தேவைக்கு மட்டும் குடித்திருந்தால்
சிறு தேர் போல் அழகு சேர்ந்திருக்காது
பாலை மட்டும் குடித்திருந்தால் இப்
பவள மேனி கிடைத்திருக்காது
சலிப்போடு ஊட்டிய பாலாயிருந்தால்
சந்தன மணம் உனைத் தழுவி நிற்காது !

அன்பை வார்த்து
அறுபது நாளில்
அம்மா வளர்த்த
அழகுக் கிளியே !

நீ கையில் விழக் காத்திருந்த நாங்களெல்லாம்
உன் கை கோர்த்து விளையாடக் காத்திருப்போம்

உண்டு , உறங்கி ,
உயிரோவியமாய் ஓடி வா!!

எழுதியவர் : மாரா (2-Jan-14, 11:46 pm)
Tanglish : en sella magale
பார்வை : 223

மேலே