நடமாடும் தெய்வங்கள்
தெய்வம் நமக்கு மூன்று
தெரிந்துகொண்டு வாழு! – நம்
கண்கள் முன்னே உலவும்
கடவுள் இந்த மூவரே!
-
வயிற்றில் நம்மைச் சுமந்து
வளர்த்த அன்பு அன்னை – தன்
உயிராய் நம்மைக் காப்பாள்
உயர்ந்த தெய்வம் அவளே!
-
தோளில் தூக்கி கொஞ்சி
பள்ளி போக வைத்து – நல்
ஆளாய் ஆக்கும் தந்தை
ஆவர் இரண்டாம் தெய்வமே!
-
‘எண்ணும் எழுத்தும் கண்ணாம்’
என்று சொல்லும் குறளே! – இதை
அறிந்திடச்செய்யும் குருவே!
ஆவர் மூன்றாம் தெய்வமே!
-
இந்த மூன்று தெய்வங்கள்
இருளை விரட்டும் தீபங்கள்
எந்தப் பதவி பெற்றாலும் – நாம்
இவரை மதித்து வாழ்வோமே!