கருங்கல் சொல்லும் கல்வி

"கருங்கல் சொல்லும் கல்வி "
கருங்கல் எத்தனை ஆண்டுகள் கிடந்தாலும் , அது எந்த விளைவையும் தருவதில்லை . ஒரு கருங்கல் இன்னொரு கருங்கல்லோடு உரசினால் தீப்பொறி வரும் . அந்த தீப்பொறியை வைத்து எண்ணற்ற செயல்களை செய்து பயன் பெறலாம் . சமையல் செய்யலாம் , வெளிச்சம் பெறலாம் , குளிர் காயலாம் .
அந்த இரண்டு கற்களும் எத்தனை ஆண்டுகள் தனித்தனியே கிடந்தாலும் அதில் தீப்பொறி வராது . அதே போலத்தான் மனித மூளையும்!
எத்தனை ஆண்டுகள் ஒருவரின் மூளை தனிமையில் இருந்தாலும் அது புதிய பயனை தராது . ஒரு மூளையும் இன்னொரு மூளையும் உரசும்போது தான் , அதாவது , ஒருவர் சிந்தனையும் இன்னொருவர் சிந்தனையும் மோதும்போது தான் புதிய சிந்தனை பிறக்கும் .
வாதமும் எதிர் வாதமும் இல்லை என்றால் புதிய சிந்தனை வராது . எந்த ஒன்றும் மற்றொன்றோடு சேராமல் தனித்து இருந்தால் , எங்கும் எதிலும் வளர்ச்சி இருக்காது .
காடுகளில் தனித்து வாழும் ஆதிவாசிகள் காலம் காலமாக அப்படியே தான் இருக்கிறார்கள் . ஆனால் கலந்து வாழும் , கருத்துக்கள் மோத வாழும் மக்கள் அறிவால் ஆற்றலால் நாகரீகத்தால் சிந்தனையால் , செயலால் , வசதியால் வளர்ந்து கொண்டே செல்கின்றனர் .
உரசலும் மோதலும் ஆக்கத்திற்கு பயன்பட வேண்டுமே ஒழிய அழிவுக்கல்ல. தீப்பொறியை இரண்டு விதத்தில் பயன்படுத்தலாம் அது பயன்படுத்துபவரைபொருத்தது .

எழுதியவர் : (5-Jan-14, 12:34 pm)
பார்வை : 122

மேலே