அன்பு உறவின்
மனதடக்க முடியா நேரங்களில்
கோப வார்த்தைகளால்
உண்மையான அன்புகளை காயப்படுத்தாதிர்கள்
அது .....!!!
சாகும் வரைக்கும் உங்களை மட்டும் அல்ல
அன்பு வைத்திருந்த உறவின் சிறகையும் முறித்து
உயிர்ப்பான வாழ்க்கையையும்
ஊனமாக்கிவிடும் ......!!!
ஆதலால் .....!
தவமிருங்கள் கோபம் தணிய
தவறியும் வார்த்தைகளால் வாளெடுத்து வெட்டாதிர்கள்
அதுவே உங்களை வெட்டி கொல்லும் .....!!!