பாதை எல்லாம் பூக்கள் வாசம்

பார்க்கும் பார்வையில் வாசம் இருந்தால்
போகும் பாதைகளில் பூக்கள் இருக்கும்...

பயந்து பயந்து நாமும் இருந்தால் பிறகு
பட்டுக் கம்பளமும் கால் வழுக்கும்.....

எண்ணத்தில் சுத்தம் வைத்தே நாம்
எழுகின்ற காலையை கவிதை ஆகுவோம்

எதற்கெடுத்தாலும் எதிர்மறை பேசி பேசி
ஏய்த்து வாழ்வோரிடம் செவித் திறன் இழப்போம்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Jan-14, 6:18 am)
பார்வை : 111

மேலே