துடித்துக் கிடக்கும் என் காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
எல்லாம் மாறி போனதடா..
உன் கொஞ்சல்களும்
செல்ல சிணுங்கல்களும்
முகம் தெரியா இருட்டுகளும்
முடிவில்லா நம் பரிபாஷைகளும்
உண்மை மறைக்கும் உன் சிரிப்புகளும்
ஊதினால் பறக்கும் நம் ஊடல்களும்
மொத்தமாய்
மாறித் தான் போனதடா...
புன்னகை சுமக்கும் புகைப்படமாய்...
என்றும் கிழிக்கப்படாத
நாள்காட்டியாய்...
மாறாமல் இருப்பதென்னவோ
துடித்துக் கிடக்கும்
என் காதல் மட்டும் தான்...!