எனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது தெரியுமா
![](https://eluthu.com/images/loading.gif)
தூளியை கட்டினேன் வீட்டினுள் நானும்
குளிதனை வெட்டினேன் தோட்டத்தில் நானும்
குழந்தையை மெல்லவே தூளியில் போட்டேன்
தளிர்தனை குழியிலே மெல்லவே வைத்தேன்
தாலாட்டு பாடி தொட்டிலை ஆட்டினேன்
தன்மையாய் மண் மூடி தளிர்தனை நிறுத்தினேன்
விழித்ததும் சிரித்தது மழலையே - அது என்
விழிகளில் செடியதன் மலர்களே.....
தென்றலே தாலாட்டு தேன்தமிழ் சீராட்டு
தெரிகின்ற காட்சிகள் தித்திக்கும் உறவுகள்...
ஜடப் பொருளிலும் உயிரோட்டம் - இதோ
ஜதி சொல்கிறது இடித்த வாசல் படி......
எனினும்
சொடர்ந்து நடந்து சொல்கிறேன்.....
பசியால் அழுகிறது செடி........
பாவம் - தாய்மையுணர்வோடு
அதன் இலைகள் கோதி.......
என்னோடு அணைத்துக் கொள்கிறேன்......
கருவண்டு ஒன்று பட்டெனப் பறந்து செல்கிறது..
அது நான் நேற்று
அதன் கன்னத்தில் வைத்த திருஷ்டிப் பொட்டு...