இன்பம் தருவீகளா
இன்பம் தருவீகளா?
சிட்டுக் குருவிகளா என்னை
விட்டுப் பிரிவிகளா?
நத்தும் உறவுகளா என்னை
நாட மறப்பீகளா?
பட்டுச் சிறகுகளால் மெல்லத்
தட்டி எழுப்புவிகளா?
கத்தும் சிற்றொலியால் நல்ல
கானம் செய்வீகளா?
பட்ட உறவுகளை மீண்டும்
பாடித் திரிவீகளா?
கெட்ட சகுனங்களை தாண்டும்
கேண்மை வருவீகளா?
எட்டும் தூரமட்டும் அங்கும்
எடுத்துப் போவீகளா?
வெட்ட வெளியில் எங்கும்
சுற்றிக் காண்பீகளா?
சுட்டும் சுடர்விழிப் பாரதி
சொந்தச்சிட்டுகளா!
இட்டும் அவன்வழி பழகி
இன்பம் தருவீகளா?
தொட்டு நாளெல்லாம் எமக்கு
துணையாய் இருப்பீகளா?
கிட்டும் சொர்க்கமாம் இங்கே
கிளைத்து வாழ்வீகளா?
கொ.பெ.பி.அய்யா