ஆசிரிய ஆசான்கள்

பச்சை உதிர்ந்து விழும் பழுத்த இலை எடுத்து நரம்பு தெரிய நோட்டில் ஒட்டி வைத்து கலையார்வம் வளர்த்து
பழம் காய்கறிகள் கொண்டு வரச் சொல்லி, அதன் மகத்துவம் சொல்லி, உண்ண வைத்து
ஓரிடத்தில் அமர வைக்க
முடியா குழந்தையை
அமைதியெனும் தியானத்தில்
உறங்க வைத்து கை கால் உடலோடு புத்தியும் பலப்பட
விளையாட்டுகளுடன் ஓடி ஆடி
ஒழுக்கம் கற்றுக் கொடுத்து
அன்பு தடவி பாலூட்டப் படும் கல்வி பசுமரத்தாணியாய் பதியும் பள்ளிப் பருவத்தில்
தெய்வத்தையும் சற்று பின் தள்ளி பிரமாணடமாய் சிகரம் எழுகிறார்கள் மறக்க முடியா
தவ அவதார ஆசிரிய ஆசான்கள்.......!!!!!

எழுதியவர் : Akramshaaa (13-Feb-14, 8:30 am)
Tanglish : aasiriya aasangal
பார்வை : 53

மேலே