எதிர்கொண்டு நின்று போராடு

மனிதம் வளருமா உன் செயலால்?
எதிர் கொண்டு முன் செல்!
மாண்பு தலைக்குமா உன்னால்?
எதிர்கொண்டு நின்று போராடு!

அன்பு வேண்டுமா நம்மிடம்?
வன் சொல் என்றும் தவிர்த்திடு!
ஆதரவு வேண்டுமா எம்மிடம்?
வார்த்தை கனிந்து பேசிடு!

உணவுப் பஞ்சமா எம்மிடம்?
ஏழ்மை வெறுத்துப் போராடு!
உதவி வேண்டுமா அரசிடம்?
எதிர்த்து நின்று பெற்றுக் கொள்!

கல்வி வேண்டுமா உன்னிடம்?
நீயே போராடு உன்னுடன்!
கலைகள் கற்க ஆசையா?
நீ சபையில் துணிவாய் நின்றிடு!

துணிவு வேண்டுமா உனக்கு? - உனை
விட்டு விரட்டு கோழைத் தனத்தை!
துயரம் நீங்கவா உனக்கு?
வாழ்ந்திடு வீரனாய் நின்று!

உறுதியாய் நிலைக்க வேண்டுமா உனக்கு?
தன்னம்பிக்கை கைக்கொள் என்றும்!
உறவுகள் வேண்டுமா உனக்கு?
தடைகள் தாண்டிடு தனியாய்!

சாதிக்க வேண்டுமா உனக்கு?
தவறை தவிர்த்திடு எதிலும்!
சாதனை வேண்டுமா உனக்கு?
தொழுதிடு முயற்சியை என்றும்!

எழுதியவர் : ஜவ்ஹர் (18-Feb-14, 9:22 pm)
பார்வை : 628

மேலே