அவள் புரிந்து கொள்வதற்காக

புரியாமல்
பேசுகிறேன் அவள் புரிந்து
கொள்வதற்காக...
தெரியாமல்
பார்க்கிறேன் அவள் பார்த்து
கொள்வதற்க்காக...
தனியாக
தவிக்கிறேன் அவள் தெரிந்து
கொள்வதற்காக...
மறைவாக
நிற்கிறேன் அவள் அறிந்து
கொள்வதற்காக...
கவியாக
வருகிறேன் அவள் கவனம்
கொள்வதற்காக...
எழுத்தாக
எழுகிறேன் அவள் நினைவு
கொள்வதற்காக...
புயலாக
கடக்கிறேன் அவள் மையம்
கொள்வதற்காக...
காற்றாக
மறைகிறேன் அவள் கண்டு
கொள்வதற்காக...
நிலவாக
உதிக்கிறேன் அவள் கவர்ந்து
கொள்வதற்காக...
நிழலாக
தொடர்கிறேன் அவள் மணந்து
கொள்வதற்காக...