எனைத் தேடும் காதலி நான் - மணியன்

கலைந்த உன் கேசத்தில்
அலைந்த உன் கண்களில்
விளைந்த உன் தோள்மதிலில்
நனைந்த உன் இதழிடுக்கில். . . . .
*******

நிமிர்ந்த உன் தேர்நடையில்
படர்ந்த உன் மார்பளவில்
அமிழ்ந்த உன் அழகுவயிறில்
சிறுத்த உன் இடைக்குதிரில். . . .
*******

புனைந்த உன் கவிச்சுவையில்
பொழிந்த நல் சொற்க்கதிரில்
நினைத்த உன் நினைவுகளில்
அணைத்த உன் கையிடுக்கில் . . . .
*******

விடுத்த உன் விடுகையினில்
படித்த மனக் குளிர்ச்சியினில்
நகைத்த உன் புன்னகையில்
வளைத்த உன் பார்வையினில் . . . .
*******

துடித்த என் இதயமதில்
நடித்த நல் எண்ணமதில்
பிடித்தது என்ன வென்று
அடித்துக் கூற வழியுமின்றி. . . .
*******

புதைந்த உன் சுவடுகளில்
சிதைந்த என் நிழற்ப்படுகை
நடந்த உன் பாதங்களை
தொடர்ந்த என் நினைவலைகள். . . .
*******

எதில் நான் தொலைந்தேனடா. . . . . .
பதில் தெரியாப் பதுமையடா. . . . . . .


*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (21-Feb-14, 9:57 pm)
பார்வை : 156

மேலே