அறிக்கை
வானிலை அறிக்கை
வாசிப்பவர் உங்கள் அ..ஆ..இ..ஈ..
இந்த வாரம்
அங்கும் இங்குமாய்
லேசானது முதல்
கணமானது வரை
மழை பெய்யக் கூடும்
வானம் ஆங்காங்கே
மேக மூட்டத்துடன்
காணப்படும்.
மனநிலை அறிக்கை
வாசிப்பவர் உங்கள் உ..ஊ..எ..ஏ..
இந்த ஆயுள்
அங்கும் இங்குமாய்
சில்லறைக் காசு முதல்
கட்டானபணம் கிடைக்க
அலைப் பாயக் கூடும்
மனம் ஆங்காங்கே
சோக கூட்டத்துடன்
நிம்மதி இழந்து
காணப்படும்!.