காதல் குழந்தை
பேருந்தில்
ஏறி...
உனக்கும் எனக்கும்
இரண்டுப் பயணச்சீட்டுக்
கேட்டேன்....
நடத்துனர்,
''அறிவிப்பு பார்க்கவில்லையா'' என்கிறார்....
"மூன்று" வயதுக்கு மேற்ப்பட்டக்
குழந்தைகளுக்குப்
பயணச்சீட்டு
வாங்க
வேண்டுமாம்.....
அவரிடம்
சொல்லிவிட்டாயா.....?
நம்
காதல்
பிறந்து ''மூன்று''
வருடம் ஆகிறதென்று....