வேண்டும்
வேண்டும்!
வான் வெளி முழுதும்
வண்ணச் சிறகால் நான்
அளந்து பார்க்கவேண்டும்
காற்று வடிவெடுத்து நான்
ககனமெல்லாம் களித்திருக்க வேண்டும்
மீனாய் பிறந்து நான் மீளா கடலினில்
மூழ்கிவர வேண்டும்
நீராய் மாறி நான் நீள்மலை தழுவவேணும்
அக்கினியாய் நான் இருந்து
ஊழித் தீயாய் எரித்திருக்க வேணும்
எண்ணவடிவெடுத்து நான்
எழில் மாந்தர் இதயத்தில் இணையவேண்டும்
நட்பாய் நானிருந்து உயிர் நண்பரிடையே
உடல் பெற வேண்டும்
இறைவா.