வலிகளின் தொகுப்புகள்

நாட்கள் எனைவிட்டு
என்னுயிர் விடைபெற்று
போகும் வரை
என்னுயிரே உன்
நினைவில் நனைந்த நிமிடங்கள்
நெஞ்சை விட்டு விலகாது !..

தனிமை நிஜமாக
இனிமை நிழலாகிறது
என் நிமிடங்களில்
உன் பிரிவினாலே...

கனவின் விழியில்
இமைதிறக்கும்
உன் நினைவில் தான்
தினமும் நான்
உயிர் பிழைக்கிறேன்
நீ பிரிந்த நாளில் இருந்து...

விழிநீரின் ஈரம் உலரவில்லை..
என் இரவுகள் இன்னும் புலரவில்லை...
சுவாசக்காற்றே நீ இல்லாமல்...

என் நினைவுகள்
உயிர் வாழும் வரை
அன்பே உன்
நினைவுகள் என்
உயிரில் வாழும்
உதிரம் கலந்த உணர்வுகளாக...

எழுதியவர் : confidentkk (12-Apr-14, 5:54 pm)
பார்வை : 76

மேலே