சிவப் - பூ
பல கனவு கொண்ட என்னை
பல கணவன் கொள்ள வைத்து,
அம்மாவாசை இரவில்,
பகல் நிலவாக உலாத்தியது ஏனடியோ?
பல தலைவன் கொண்ட எனக்கு,
தாரம் என்ற அங்கீகாரம் கிடைக்க தவரியதேனோ?
வேசி எனவும் கேலி செய்யப்பட்டேன்.
என் பாதை தடத்தில் வேலியாக ஒருவர் இருக்க தவறியதால்.
பலர் இச்சை தீர்க்க,
களவுக்கு இரையான என்னை
பாரிலிருந்து அழைத்து செல்ல யாரிடம்
வேண்டுமோ இம்மனம்?
இப்படி, எண்ணற்ற கேள்விகளுடன்,
சிவப்பு அறையில்
அடுத்த கணவனின் வருகைக்கு காத்திருந்த எனக்கு
பொருந்தும் இவ்விருவரிகள்.
"பாலினால் கவர்ந்த என்னை,
பாலியலால் கவரும் பொருட்டு"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
