ஆனந்தா சலூன்
அதிகமான முடியை
அளவாக்குவதர்க்கு
அடிஎடுத்து வைத்தேன்
"ஆனந்தா" சலூனில் ...
அபாரமான வரவேற்ப்பு
அமைதியாய் நுழைந்தேன்
அமர்ந்தேன்
அளவாய் நோட்டமிட்டேன்
குளிர் சாதன அறை ....
குலு குலு காற்று.....
சுழலும் நாற்காலிகள்......
சுற்றிலும் இசை நாதம் ......
அட்டவணை ஒன்றை தந்தார்கள்
தேர்வு செய்ய சொன்னார்கள்
முடி வெட்டலின் வகையை ..
வந்து விட்டோம்
சென்று விடுவோம்
முடியை குறைத்து என
தேர்வு செய்தேன் ஒரு எண்ணை
ஒன்றும் புரியாமல்
முடி வெட்டுபவரின்
கைகளில் ஓவியங்கள் ...
தலையிலும் ஓவியத்தை
வரைந்து விடுவரோ ? என உள்ளே தவித்தேன் .
பத்து நிமிடங்களில்
இயந்திரம் ஒன்று தலையில்
இயக்க பட்டது
ரசீது ஒன்று கொடுத்தார்கள்
மதிப்பு ரூ 450
குளிர் சாதனஅறையில் வேர்த்தது..
சலூனும் ஒரு சுய தொழில் என
சாந்தத்துடன் சத்தம்மில்லாமல்
வெளியே வந்தேன் .........
ஆனந்தம் இல்லாமல்
ஆனந்தா சலூனிலிருந்து