பூதங்கள் இறங்கும் வழி

முன்பொருகாலத்தில் கேட்டு மகிழ்ந்த
தாத்தா,பாட்டிகளின்
ஆண்டிக் கதைகளில் அறியா
பூதங்களை எல்லாம் இன்று
கொம்புகளும்,
நீண்ட வேட்டைப் பற்களும்,
வாலும் முளைத்த
ஒரு விசித்திர விலங்காய்
தெருத்தெருவாய் காணமுடிகின்றன..

இப்போது வீதிக்கு இறங்கினால்
ஒரு பேயை அல்லது,பூதத்தை
எதிர்கொள்ள நேரிடுவதிலிருந்து நம்மை
தவிர்த்துக் கொள்ள
இயலாமலேயே இருக்கின்றன.

இதுவரை கண்டிராத
ஒரு பூதத்தை நேற்று
எதச்சையாய்
சந்திக்க வேண்டியதாயிற்று
அதனிடமிருந்து தப்பிக்க
நான் எடுத்த பிராயத்தனங்கள்
ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த
அனுபவத்தை தந்தன



நாளை சந்திக்க நேரிடும்
தகப்பன் பெயர் தெரியாமல்
தருதலையாய் அலையும்
பூதத்தை நினைத்தால்தான்
என் பிள்ளைகளை நினைத்து
ஈரல் குலை நடுங்குகிறது

பூதங்கள் இறங்கும் வழியை
அடைப்பதற்கு என்னிடம்
மந்திரமும் இல்லை,
வேறு மார்க்கமும் இல்லை
ஆயினும் தைரியத்தை வரவழைத்து
காத்திருக்கிறேன்


அதனால்;இனி வரட்டும் பூதங்கள்
சாடிக்கு வைத்து மூடி
கடலில் கரைத்து விடுகிறேன்.
.

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி -இலங்கை. (14-May-14, 1:51 am)
பார்வை : 109

மேலே