வெட்டுக்கிளி 2

சிறிது நேரம் மாடியில் இருந்துவிட்டு,பள்ளிக்கு செல்ல தயாராகினேன்.குளித்து விட்டு என் பள்ளிசிருடையை அணிந்திருந்தேன்.

அனு ரெடி ஆய்டியா தலைவாரிவிடவா என்று என் அக்கா அழைத்தால்.
இன்னைக்கு பேசாம லீவ் போட்டுடலாமா ,எப்படியு அரைநாள்தான் ஸ்கூல் பேசாம மண்டே போய்கலாமா என்று யோசித்கொண்டிருந்தேன்.
அக்கா தலையைவாரி முடித்து விட்டு நன்றாக இருகிறதா என்று கேட்டால்.
நல்லா இருக்கு என்று கூறி என் அக்காவுக்கு முத்தமிட்டேன்.

சத்யா...என என் அம்மா என் அக்காவை அழைத்தார்கள்
அக்கா எழுந்து சென்றுவிட்டால்.

அதன் பின்பு என் கால்கொலுசின் ஓசை யாருக்கும் கேட்காதபடி ஒரு ஒரு அறையாக சென்று யார்யார் என்ன செய்துகொண்டிருகிறார்கள் என்று பார்த்தேன்

என் அம்மாவும்,அக்காவும் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
என் அப்பா அரசு பள்ளியில் கணித ஆசிரியர் அதனால் நடந்துமுடிந்த அரையாண்டு விடைத்தாளை திருத்திகொண்டிருந்தார்.
அண்ணனை காணவில்லை,குளியலறையில் இருந்து சத்தம் கேட்டது,அண்ணன் குளித்து கொண்டிருந்தான்.

அதன் பின்பு நான் சென்று என் படுகையில் படுத்து கொண்டேன் .
அனு அனு என்று அழைத்தவாறு என் அம்மா படுக்கை அரைக்கு வந்தாள்.
என்னடி ரெடி ஆயிட்டு படுத்துட்டு இருக்க வா சாப்பிடு என்று அழைத்தார்கள் அம்மா

முகத்தை பாவமாக வைத்து கொண்டு.மெதுவாக எழுந்து.
எனக்கு தலைவலிக்குது,தலைல யாரோ சுத்தி வெச்சு அடிகுரமாரி இருக்கு என்னால முடில.தலைவேற சுத்துது என்று கூறினேன்.
என் அம்மா எதுவும் பேசவில்லை முறைத்து விட்டு அக்கிருந்து சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து என் அப்பா வந்தார்.
அரமித்துவிட்டாய உன் நாடகத்தை என்பது போலவே என்னை பார்தார்.
என் அருகில் வந்து அமர்ந்து அனு வாரத்துக்கு எப்படியு இரண்டுநாள் ஆவது லீவ் போட்டுற இன்னைக்கு சனிகிழமை அரைநாள்தான் ஸ்கூல் போய்ட்டு வந்துடு,எனக்கு டைம் ஆச்சு நா கெளம்புற என்று கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் அப்பா.

அதன் பின்பு சரி பள்ளிக்கு செல்லலாம் என்று எழுந்து வந்தேன்.
என் அண்ணனும்,அக்காவும் எதிரே நின்று கொண்டிருந்தனர்,
என்ன அனு பிளான் பலப் பா என கேட்டுவிட்டு என் அண்ணன் சிரித்தான்,
சுத்திவேற வெச்சு யாரோ அடிகுராகளா என்று என் அக்கா கூறினால்.
யார் அனு சுத்தியால அடிக்குராக என என் அண்ணன் கேட்டான்.
இப்ப சரியாய்டுச்சா,சித்தபாவ பார்த்ததும் சரியா போய் இருக்கு என்று கூறி என் அக்கா சிரித்தால்

கோவமாக சென்று தனியாக அமர்ந்துக்கொண்டேன்.அதன் பின்பு என் அக்கா வந்து என்னை சமாதானம் செய்தால்.
என் வீட்டில் தினமும் காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் இருந்தது.எப்போதும் போல நானும் என் அக்காவும் மாடிக்கு சென்று உணவு வைத்துவிட்டு வந்தோம்.

நானும்,என் அக்காவும் பால்கணியில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தோம்,அப்போது
ஒரு வெட்டுக்கிளி பறந்து வந்து எங்கள் அருகே அமர்ந்தது.

தொடரும்...

எழுதியவர் : அனுரஞ்சனி (18-May-14, 1:42 pm)
பார்வை : 265

மேலே