நியாயத்தின் தீர்ப்பு

காலம்காலமாய் உண்மை தோற்பதும்
பொய்மை வெல்வதும்
நிரந்தரமான நிகழ்வாய் போய்விட
நியாய தீர்ப்பு பலமில்லாமல் போய்விட்டது .....

இரவோடு இரவாக
சாட்சிகள் எல்லாம்
சாய்ந்துவிடுகிறது பணத்தின் பக்கம்
நியாயமோ அனாதையாய் .......

அப்பாவிகளின்
கடைசி நம்பிக்கையை கூட
அலட்சியம் செய்கிறது
பணத்தின் ஆணவம் .......

வேரோடு சாய்ந்தும்
விட்டு விட்டு துளிர்க்க பார்க்கிறது
நியாயத்தின் கடைசி உயிர்த்துடிப்பு
இருந்தும் அநியாயமே ஆதிக்கத்தில் .......

நாளை நாளை என்ற நம்பிக்கையில்
நகர்கிறது சாமான்யர்களின் வாழ்க்கை
ஏமாற்றம்தான் மிச்சமாய் ........

கருவில் கூட
கலவரம் பற்றிக்கொள்கிறது
பிறக்கின்ற மனிதரில்
பலபேர் பயங்கரவாதிகளாய் ........

நேர்மையாய் நீதியாய் வாழ்ந்து
நேர்வழியில் உயர
பலபேருக்கு தயக்கம்
சிலபேருக்கே விருப்பம் .......

பேராசைகளை ஆசைகளாய்
கொண்டவர்களுக்கு
நியாயத்தின் எதிர்பார்ப்பு
எப்படி புரிந்திருக்கும் .........

தனக்கென வரும்போதே புரிகிறது
அவஸ்த்தைகளின் வலி
அன்று ,
அக்கிரமக்காரனும் நியாயத்தை
எதிர்பார்க்கிறான் ......

காலத்தின் வரலாற்றில்
நியாயம் தோற்பது நிரந்தரமில்லை
நிச்சயம்
ஓர் நாள் நியாயம் வெல்லும் .........

அன்று புரியும்
நியாயத்தின் தீர்ப்பு
அழுதவர் சிரிப்பார்
சிரித்தவர் அழுவார் .......

எழுதியவர் : வினாயகமுருகன் (27-May-14, 8:39 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 321

மேலே