தந்தையர் தினம்
கருவறை இல்லாமல்
சுமக்கும் நீயும் ஒரு
தாய்தான்!!
என்னை உன்
நெஞ்சில் சுமப்பதால்.............
சுமைகளையே நீ சுமந்து
என் வாழ்வை
சுகமாக்கி போனாய்
தடைகளை களைந்து
வழிகாட்டி ஆனாய் .............
இருளை ஒளித்து வைத்து
ஒளியாய் மொழிபெயர்த்தாய்
உன் விழிகளில்................
நீ ஏற்றிய ஒளி
காற்றில்
அசைந்தாலும்
அணையாமல் வாழ்கிறது
என் வாழ்வில் ....................
ஆயிரம் ஜென்மம் வேண்டாம்
அடுத்தொரு
ஜென்மம் என்றால் அதில்
உன் ஆயுளாய்
நான் வேண்டும் .......................
என் தந்தைக்காக!!!
கவிதாயினி நிலாபாரதி