உயிர் ஊடல், உடல் காதல்
ஆண்
பூமி என்ன காவளா?
புளூடோ தாண்டி போனவன்,
பூவுக்கிந்த வேளியால்,
பாவமாகி போனதேன்.
காற்று, எந்த நேரமும்,
வீசி தானே போகனும்.
பூவு தான, சூதானமா,
காலத்த பாக்கனும்?
பாத்து, காத்து, தான - ஒரு
பாதி காவல் மீறனும்?
மீதி, வாட வந்து மோத,
வந்த காதல் நோவு போதயா,
இந்த காலன் காவு தேவயா?
நாவில் நங்கூரமா!
நோவாமல் நீ பேசவா?
பூமேல் பனிக்கட்டியா!
பூக்காமல் பூ நோகவா?
வாயாலே, பனிகட்டி
வார்த்தைகள், உறைவிட்டு
வைத்தாயே - நான் பாவமா
சீறாக வடிகட்டி,
சிந்தாமல் அதைகொட்டி,
கொண்டேனே, மது கிண்ணமா.
பெண்
ஏய் எந்தன் காவளா,
ஏதும் ஊடலின்றியே,
வெறும் காதலா?
சற்றே தாங்கிக் கொள்.
சிறு தீந்தூறல் போடவா?
பூவுக்கிந்த வேளிதான்,
பூஜைக்கான வேலதான்,
பூ மீது தீந்தூறலால்,
கட்டிப்பனியும், கட்டில் வெப்பம்கண்டு,
காட்டில், பட்டுப் பனியாக பனியும்.
தொட்டுப் பற்ற பயில்வோமா?
வேளியே பூவ மேயுமா?
பூவும் காயாய் மாற வேண்டாமா?