தாய்மையாய் எக்கணமும் நிறைந்தாய்

அம்மா உன்

பொடிபொடியான கையெழுத்தில்

சமையல் குறிப்புகளும்

நாட்டுமருந்துக் குறிப்புகளும்

சிறு எழுத்துப் பிழைகளுடன் ---எனினும்

அருமையானதோர் இலக்கியப் பெட்டகம்போல்

என் புத்தக அலமாரியில் !!!!!!

அவற்றை வாசிக்கும் கணம்தோறும்

குறிப்புகளாய்ப் பதிந்திருக்கும் உன்

பாசமும் ,பரிவும் ,அக்கறையும்

என்னை ஸ்பரிசித்து நெகிழ்த்தத்

தவறியதேயில்லை !!!!!!!!!!!!

என் பார்வையை விட்டு நீ

மறைந்திருந்தாலும் தாய்மையாய்

எக்கணமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறாய் !

எண்ணமாய் ...எழுத்தாய் ...மட்டுமின்றி

என் சந்தோஷ,துக்க மற்றும்

இன்ன பிற கணங்களில்

நீ என்ன சொல்லியிருப்பாய் எனும்

என் கற்பனைப் பதிவில் கூட !!!

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (19-Jun-14, 3:55 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 61

மேலே