அலைக் கவிதை மறந்தேன்
மழை தீண்டாத மணலாய்
தமிழற்று கிடந்தேன்...
கணப்பொழுதில் கவிதைகள் ...
காலடியில் முளைத்தனவே !!!
அலைவடிவில் கவிகளேல்லாம்
கால் நனைத்துப் போயின...
மணல் கரைந்து
பாதம் பதிந்து
இதயம் கொஞ்சம் நனைந்தது ...
தெரித்து விழுந்த ஒரு துளி மட்டும்
உதட்டை கொஞ்சம் கரித்தது ....
அடிவானம் சிவப்பா? இல்லை
கடல் உப்பு கொடுத்த உவர்ப்பா?
மூழ்கி எழும் கதிரவன் போல
நான் மூழ்கி வந்தேன்... போதும் அப்பா...
எனை நனைக்க எத்தனை
ஆசை இந்த பேராழிக்கு!!!
ஆசை தீராத இந்த அழகியை
நான் வர்ணிப்பதெந்த மொழியில்..
நீச்சல் மொழி தெரிந்தும்
உன்னோடு உரையாட முடியவில்லை...
உன்னை நான் சுவைத்தபோது
உப்பிட்டவரை மறக்கவில்லை...
என் சந்தோஷ தருணங்களை
உனக்குள்ளே தேடுகிறேன் ...
உனக்குள் சுனாமி குணம் இருப்பதால்
உனக்கு இரங்கற்பா பாடுகிறேன்...
உவர்ப்போடு ... க நிலவன்