மீண்டும் வானம்பாடி - கவிதைப் போட்டி

இசை நீர்த்துப்
போயிருந்த ஒரு
தேச எல்லையொன்றில்
மறதிகளுக்கு சாட்சியாய்
நின்றிருந்தது
கிளைகளிலான மரம்....!!!

கழன்று விட்டிருந்த
பெருநிலத் துண்டு
மரணித்துவிட்டதாய் சொல்லி
மௌனித்து இருந்தது
உயிர்த்துளி உறையவைத்து....!!!

கண்ணிக்குத் தப்பியிருந்த
மரங்கொத்தி
தண்ணீர் தேடிக்
கொத்தத் தொடங்கியிருந்தது
நடுமரங்களின்
கிளைநீட்சிகளில்....!!!

காற்றுகுடித்த கொத்தல்
தழும்புகளில்
ராகம் துலங்கியிருந்தது
யாருமற்ற பெருவெளியில்...

நீர்த்திருந்த தேசங்களில்
நீர்த்துளி விழுதலாய்
முதல் இசை...

மீண்டும் துளிர்த்திருந்த
கிளைநுனிப் பச்சைகண்டு

மௌனங்கள் உடைத்து
இசைபருகித்
திளைத்திருந்தது
உயிர்.....!!
நீர்த்துப் போயிருந்த
வானம்பாடி தேசங்களில்....

எழுதியவர் : சரவணா (7-Jul-14, 11:35 am)
பார்வை : 80

மேலே