உண்மைக்கே காலம் இல்லை
உண்மைக்கே காலம் இல்லை
உரைத்தார் பெரியோர் என்றோ !
உணர்ந்தேன் உட்கருத்தை நானும்
உரைத்தது உண்மை எனக்கு இன்றோ !
உள்ளதை உள்ளபடியே கூறினால்
உலகிலே பலரும் ஏற்க மறுப்பார் !
உண்மைகள் உள்ளத்தை குத்திடும்
உள்ளத்திலே ஊசியாய் தைத்திடும் !
உண்மையே உரைப்பது உடன்பிறந்தது
உரைக்காமல் விடுவதும் வழக்கமல்ல !
உண்மையை சொல்கிறேன் என்னைப்பற்றி
உள்ளபடி பழக்கமில்லை மாற்றிசொல்ல !
உண்மையை உரைப்பதும் மறுப்பதும்
உலகிலும் அவரவர் உரிமைதானே !
உணர்ந்த சிலரோ ஏற்பதும் தவிர்ப்பதும்
உண்மையில் அவரவர் விருப்பம்தானே !
உள்ளத்திற்கு கசக்கும் உண்மை சிலருக்கு
உள்ளத்தில் பெருகும் வெறுப்பும் கோபமும் !
உள்ளதை சொன்னாலே உள்ளமும் மாறிடும்
உள்ளதை சொன்னேன் உள்ளத்தில் கொள்க !
பழனி குமார்

