மீண்டும் காதலில் விழுந்தேன்

வெட்டி எறிந்தேன் வெறுப்பில்
அவளுக்காக நான் வைத்த
மரங்களை !

வெறுமையானது இடம்
என் மனதைப் போல !

அழுது தீர்த்தது மேகம்
அவைகளுக்காக !

அடங்காத கோபம்
எனை சுட்டெரித்தது
சூரியன் !

சுருண்டு விழுந்தேன்
சூழ்நிலைக் கைதி நான் !

எனைத் தொட்டு வருடியது
நிழல் அல்லவே நிஜம் !

அவள் என்று நான் இருந்தேன்
இல்லை ! இல்லை !

மரமானது அவள் மனது
மீண்டும் மலர்ந்தது மரம் !

மயங்கி எழுந்த நான்
மீண்டும்
காதலில் விழுந்தேன் !

எனை மறந்த அவள் மீது
அல்ல
எனக்காக மீண்டும் துளிர்த்த
மரங்களின் மீது !

எழுதியவர் : முகில் (20-Jul-14, 5:16 am)
பார்வை : 116

மேலே