காதல் கனவு
விசும்பும் என் நெஞ்சம் உன்
விளக்கங்களை ஏற்க்கவில்லை....!!
கனக்கும் என் கண்கள் உன்
கனவுகளை பார்க்கவில்லை....!!
உன் உறவே வாழ்க்கையாய் கொண்டேன்.... என்
கலங்களை ஏன் குலைத்தாயடா ....?
உன் கனவை நீ தேடி செல்ல ..... என்
கனவை ஏன் கலைத்தாயடா ....?
உன் உயிரை ஊற்றி என் உதடை உரைத்தாயே ....
உன் உதடுரைத்த வார்த்தைகள் என் உயிருரைக்கதானா ....??
உன் கனவு பாதையில் நீ செல்ல....
என் வாழ்க்கை கனவாகி நிற்கின்றது ....
பிரிந்து சென்ற பறவையை
மரம் தேடுவது போல .....!!
விடியல் வரும் ...
கனவு கலையும் ....
காலம் செல்ல ....
கனவின் நினைவும் கொள்ளும் ....
பின்பு ...
நினைவில்லாமலும் செல்லும் ......