கொன்று விடு என்னை
கைக்கு அடக்கமான
கைபேசியை
அதில் வரும் குறுஞ்செய்தியை
நம்பும் நீ
என்னை நம்ப மறுப்பது ஏன்?...
எத்தனை உண்மை பேசினாலும்
தாமதத்திற்கு காரணம் சொன்னாலும்
நம்ப மறுப்பது ஏன்??
உன் உதிரத்தில் உதித்த
என்னை நீ சந்தேகிப்பது
உன்னையே நீ சந்தேகிப்பது போலாகாதா??
யாருடனும் பேசாமல்
யாரோடும் சிரிக்காமல்
யாருக்கும் உதவி செய்யாமல்
கல்லூரியும் வீடும் உணவும்
என்று மட்டும் இருந்தால்
எனக்கு துணையாய்
வீட்டிற்கு வெளியே யார் இருப்பார்??
கள்ளையும் பாலையும்
பிரித்துப் பார்க்கத் தெரியாத
பாலகன் அல்ல நான்....
உன்னை சுற்றியே
என் உலகம் என்று இருக்கும் என்னை
நீ வெறுத்து ஒதுக்கி பேசுவதை விட..
நஞ்சில் நாலு வாய் கொடுத்துக்
கொன்று விடு அன்பு தாயே...