எது கவிதை
எண்ணங்களின் கோர்வைதான் கவிதையா
இல்லை
ஏக்கங்களின் போர்வைதான் கவிதையா
--------------------------------------------------------------------
இன்பங்களின் இணைப்புதான் கவிதையா
இல்லை
துன்பங்களின் பிணைப்புதான் கவிதையா
--------------------------------------------------------------------
பார்வைகளின் கோணம்தான் கவிதையா
இல்லை
பறவைகளின் வானம்தான் கவிதையா
--------------------------------------------------------------------
காற்றில் செல்லும் ஓசைதன் கவிதையா
இல்லை
புத்தன் சொன்ன ஆசைதான் கவிதையா
--------------------------------------------------------------------
பாற்கடலை கடைவது தான் கவிதையா
இல்லை
ஊர்சுடலை அடைவது தான் கவிதையா
--------------------------------------------------------------------
(பி.கு : கவிதைக்கு பதில் வாழ்கையை சேர்த்தும் படித்துபாருங்கள்)