இரவெல்லாம் பணியாற்றும் பொறியாளனைப் போலவே
செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.
அவற்றுள் ஒன்று:
ஆபத்தான இடைப்பகுதிகளில்
இரவெல்லாம் பணியாற்றும்
பொறியாளனைப் போலவே,
பழமையான மொழிகளில்
உரக்கக் கூவியபடி காதலுக்காக
என்னை நோக்கி நகர்ந்து வா!