பூவாய் போகும் நினைவுகள் - இராஜ்குமார்

பூவாய் போகும் நினைவுகள்
============================
பூவாய் போன
உன் நினைவை
எந்த நூலில்
எப்படி கோர்ப்பது
நினைவை துளைக்காமல்
கோர்க்க வழி உண்டோ ??
இதோ ...
எந்தன் மனதை ஏமாற்றி
ஒட்டி வைக்கிறேன் நினைவை ..!
மனமே மலராய்
மணக்குது என்னில்
அழகு நினைவை
முழம் முழமாய்
ரசித்தே தொடுக்கிறேன்
வாடும் நேரம்
வாராத நினைவுகள்
உந்தன் கூந்தலில்
உலகம் காணுமோ ?
- இராஜ்குமார்
நாள் : 21- 5 - 2011