என் கவி குழந்தைக்கு தாய் நீதானடி 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே...
நித்தம் நான்
உன்னை சுமப்பதால்...
நீ எனக்கு
மழலைதான்...
உன் நினைவுகளை
சுமந்து வருவதால்...
என் கவிதையும்
ஒரு குழந்தைதான்...
நீயும் நானும்
உடலளவில் சேர்ந்தால்...
கண் நிறைந்த
மழலை பிறக்குமடி...
உன்னோடு என்
நினைவுகள் சேர்வதால்,,,
கவிதை என்னும்
மழலை பிறக்குதடி...
கண் நிறைந்த மழலைக்கு
காரணம் யார் என்று...
தாய் சொன்னால்தான்
தந்தை யாரென்று தெரியும்...
தந்தை சொன்னால்தான்
கவி என்னும் என் குழந்தைக்கு...
தாய் நீ என்று தெரியும்...
கருவை சுமபதால்
நீ தாயாகிறாய்...
உன்னையும் உன்
நினைவுகளையும்...
சுமந்து வரும் கவிதையையும்
நான் சுமப்பதால்...
எல்லமாகிறேனடி நான்...
உனக்காக.....