சாம்பலாய் சரிவதே என் விதி - இராஜ்குமார்
சாம்பலாய் சரிவதே என் விதி
===========================
உன் பாதத்தை பதம் பார்த்த
முட்களும் கேக்குதடி
மென்னையின் மேனி
உரசல் இதுவாயென..?
உன் உள்ளத்தை
உருக்கத்தோடு ரசிக்கும்
நான் அறியேன் என
நீ நினைப்பது முறையோ ?
கிளிகளின் கீதம்
உன்கீச்சு குரலென எண்ணி
கிறங்கிப் போனது
காதலின் வகையோ ?
அனல் படாத
அடுத்த பக்கத்தில்
சாம்பலாய் சரிவதே
என் விதியோ ?
- இராஜ்குமார்
நாள் : 31- 8 - 2011