நெஞ்சினிலே Episode 10

நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 10

ராதாவும் பதிலுக்கு கடிதம் கொடுத்து விட்டாள். ரவி படித்து விட்டு அவனது money parse இல் வைத்திருந்தான்.

ஏற்கனவே ரவி ராதாவிடம் அவனுடைய போட்டோ ஒன்று கொடுத்து இருந்தான். ஒருநாள் இதை ராதாவுடைய அம்மா கண்டு விட்டார் உடனே ராதாவை திட்டியும் லேசாக அடித்தும் விட்டார். இதை மறுநாள்
ராதா : ( கவலையாக ) " என்னட்ட இருந்த போட்டோவ அம்மா பார்த்துட்டாங்க "
ரவி : ( அதிர்ச்சியுடன் ) " என்னங்க சொல்றிங்க "
ராதா : " ஆமாங்க அம்மா திட்டினாங்க அடிச்சும் போட்டாங்க நாங்க 2 நாளைக்கு பாக்காம இருபோம்பா "
ரவி : " சரி "

மறுபடியும் 2 நாளைக்கு பிறகு சந்தித்தனர். ராதா வீட்டில் பிரச்சினைகள் இருந்தும் சிரித்துகொண்டு பேசுவாள். ஆனால் ரவிக்கு தெரியும் ராதாவை பற்றி ரவிக்கு மிகவும் கவலை ராதாவி நினைத்து அதை வெளிக்காட்டாமல் பேசுவான். இப்படியே சில நாட்கள் கழிந்தன.

ராதா கிளாஸ் முடிந்து வரும் போது ராதாவுடன் பேசி கொண்டுவந்தான் ரவி இதை ராதாவின் முன் வீட்டில் இருக்கும் மதன் என்பவர் பார்த்துவிட்டார். இதை அவர் போய் ராதாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டார். அதன் பிறகு ராதாவை சில நாட்கள் காணவில்லை. ரவியும் சில நாட்கள் கவலையாக இருந்தான்.

ரவி ராதாவின் நண்பியிடம்,
ரவி : " ராதா எங்கங்க கொஞ்ச நாளா காண இல்ல "
நண்பி : " நீங்களும் ராதாவும் பேசுறத அவங்க அம்மாகிட்ட சொல்லிட்டாங்க அதுதான் அம்மா எங்கயும் இப்ப அனுப்புறது இல்ல "
ரவி கவலையுடன் அப்படியே நின்று கொண்டிருந்தான்
நண்பி : " நான் போறன் ரவி அண்ணா "
அவளும் சென்றாள் இவனும் கவலையுடன் வீட்டுக்கு சென்றான்.

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (12-Oct-14, 3:18 am)
பார்வை : 150

மேலே